top of page

#T17.மேற்கோள் நீயடி!

Writer's picture: Mani KannanMani Kannan

Updated: Feb 5, 2019


மேற்கோள் நீயடி என் வாழ்வினுக்கு!

தோள் மேல் நீ சாய்ந்தால் கண்ணே

இமயத்தை சாய்க்கும் பணியும்

என் இமையாலே சாத்தியமாகும்.


நின் வேல்விழிகளில் என் விழிகள் விழ

வேளாகி நான் உன் ராஜ்ஜியம் ஆள

உன் அதரங்கள் உதிர்க்கும் ஒற்றை

மகர மெய் ஒன்றே போதும்.


பொருவளவில் துன்பங்கள் வரினும்

உருவற்று அவை வீழ்ந்திட

நுட்பங்கள் சங்கமிக்கும் சிலையே உன்

நுனிவிரல் பிணைப்பே போதும்.


நடந்திட வேண்டும் வார்த்தைகள் தொலைத்து

கடந்திட வேண்டும் உன்னில் எனைக் கரைத்து

விசிறிட வேண்டும் காற்று விடுப்பெடுக்கையில்

சிரித்திட வேண்டும் உன் சிரிப்புகள் சிதறலில்


கேள்விகள் அழிக்கும் ஆழ்வி நீயடி

வேள்விகள் மட்டமடி ஆழிநிலா உனக்கு

வானிலை அறிவிப்பு எதற்கு என்

பயணங்கள் உன்னோட நிகழ்கையில்!


வழிகாட்டி பலகை ஆகிடு!

ஆம்! எந்தன் கனவு பயணத்தின்

கடைசி வழிகாட்டி பலகையாக!



love,


Mani Kannan


Click here to subscribe!

 
 
 

Comments


bottom of page