top of page
Writer's pictureMani Kannan

#T46.என் ஆசை யாவுமே

parody of the song "அகலாதே"


என் ஆசை யாவுமே மறந்து

உன் கனவு மட்டுமே நினைத்து

என் விழிகளின் திரையினிலே

உன் கனவுகள் கண்டிருப்பேன்


நான் உள்ளமட்டிலும் இணைந்து

வான் எட்டும் வரையிலும் அணைத்து

இரவம் சூழ்ந்திடினும்

சயனம் மறந்திருப்போம்.


வெண்பாக்கள் வெண்பாக்கள்

உன் அன்பாலே அரங்கேறும்

என் திருக்குறளில் சில அதிகாரம்

உன் குரலால் கைகோர்க்கும்


மழைத்தூறல் நின்ற பின்னே

வண்ண வில்லைத் தேட வேண்டும்

நிறங்கள் தேடி எடுத்தே

உன் வாழ்வில் பூச வேண்டும்


தேடிக் களைத்த தருணத்தில்

கூறல் கொண்டு தேற்றினாய்

முழுதும் ஆனா பாதியே

இனி நான் உந்தன் கைதியே


உறவாய் ஆன துறவி நீ

உரிமை கோராய் தழுவியே

தோள்கள் தட்டும் தோழி நீ

மூழ்கிப் போகும் ஆழி நீ


என் கனவின் பாதை அறிந்தவள்

கைகள் கோர்த்து நடப்பவள்

கேளாமல் ஏற்றுக் கொள்பவள்

கூறாமல் வலிகள் அறிபவள்

என் தோள்கள் நீ சாய்ந்திட தூண் ஆனதே


Love,



Click here to subscribe..

Click here to suggest a topic/situation to write about...


Cover : Image by Tú Anh from Pixabay


29 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page