top of page

#T50.நிதானமாய் ஒரு தடுமாற்றம்!

Writer: Mani KannanMani Kannan

நிதானமாய் நான் இங்கே தடுமாறுகிறேன்

வியூகங்கள் இன்றி விடியல்கள் ஏற்கிறேன்


ஆரவாரம் இன்றி சாயும் காலம் ரசிக்கிறேன்

பாரிஜாதம் தேடியே பனியில் நனைகிறேன்


சமீப காலமாய் அழகை அடிக்கடி சந்திக்கிறேன்

அதீத அழகை இமைகள் அருகில் காண்கிறேன்.


இதமாய் எனை சித்திரவதை செய்கிறாய்,

மிதமாய் என் வானிலை மாற்றினாய்.


ஒரு சித்திரம் எனை சித்ரவதை செய்கிறது.

ஒரு அற்புதம் எனை ஆளுகிறது.


வெகுமதியாய் வந்த நிறைமதி நீ

நிருபதி எனையும் ஆட்சி செய்வாய் நீ


யாவும் புதிது இங்கே மாறாத உன்னால்,

யாவும் எனது இங்கே உலகமாய் ஆன உன்னால்.


வாள் கொண்டே தூறல்கள் பிளக்கிறேன்

முள் கொண்டே பூக்கள் கோர்க்கிறேன்


பூக்கள் எறிந்தே என்னில் காயங்கள் செய்தாய்

உன் சொற்களால் நிவாரணம் அளித்தாய்.


நீயும் நீ சார்ந்த இடமுமே என் நிலமாகும்

உன் நம்பிக்கை எனக்கு இன்னொரு கரமாகும்.


Love,


Mani kannan


Click here to subscribe..


Click here to suggest a topic/situation to write about...

Comments


bottom of page