top of page

#t52.என்னோடு சில நிமிடம்!

Writer's picture: Mani KannanMani Kannan


Me walking alone
A day at Eco park, Kanyakumari

உன்னோடு நான் பேசுகையில்,

நீயும் உன்னோடு பேசிடுவாய்.

என்னைப் பற்றி நான் கூறும் வேளையில்,

உன்னை நீ அறிந்திட முயல்வாய்.


நான் வாழும் வாழ்வை கூறுகையில்

நீ வாழா வாழ்வை வாழ்ந்திட விழைவாய்.

என் கனவின் காட்சிகள் உரைக்கையில்

நீ உந்தன் விழிகளை மூடுவாய்.


என்னைப் பிடிப்பதற்கு வாய்ப்பில்லை

உன்னை உனக்கு பிடிக்கும்.




மழலை போலே வினவிடுவாய்

மறுதாய் போலே மருவிடுவாய்

மயிலைப் போலே அகவிடுவாய்

காற்றைப் போலே குலவிடுவாய்


எட்ட நிற்கும் விண்மீன்கள் ரசித்தபடி

எண்ணிப் பார்த்திட முயற்சி செய்கையில்

உன் உள்ளங்கையில் மின்மினிகள்

கொடுத்துச் செல்வேன்!


வண்ணங்கள் குலாவும் வானவில் பார்த்து

நீ மெய் மறக்கும் வேளையில்

எண்ணத்தின் ஓட்டத்தில் தூரிகை சென்ற

மழலையின் ஓவியத்தை பரிசளிப்பேன்.


பயணத்தின் பின்னர் நீ காணும் சயனம்,

உன் புகைப்படத்தின் குவியம்.

வெற்றியின் பின்னர் நீ இடும் கூச்சல்,

நீ ஆடிட விரும்பும் ஓண ஊஞ்சல்.


உன்னோடு நீ செய்திட விரும்பும் யுத்தம்,

உனை அறியாமல் நீ கொண்ட கள்வம்.

நீ ரசித்திட துடிக்கும் மிருகம்,

நீ விட்டுச் செல்ல விரும்பும் தடயம்.


உன்னோடு பேசும் பனிக் கால காற்று,

நீ தவற விட்ட நேற்று.

இவை யாவுமே நீ காணலாம்

என்னோடு சில நிமிடத்தில்.


Love,


Mani kannan


Click here to subscribe..


Click here to suggest a topic/situation to write about...

Comentarios


bottom of page