When a rowdy falls in love..have fun reading this!
அடிதடி செய்தவன் என்னில்
காதல் தடியடி நடத்தியவள் அவள்
கலவரத் தலைவன் என்னை
உருவகமாய் மாற்றியவள் அவள்
மனிதம் தொலைத்தவன் எனக்கு
நவரசம் கற்றுத் தந்தவள் அவள்
ஆயுதம் ஏந்திய அவலன் என்னில்
புனிதம் புகுத்தியவள் அவள்
அஞ்சாமல் நடந்தவன் என்னை
கொஞ்சித் திரிய வைத்தவள் அவள்
வேகம் கொண்டு பறந்தவன் என்னை
வெட்கப்பட்டு நிற்க வைத்தவள் அவள்
திமிர் கொண்டு திரிந்தவன் என்னை
சிலிர்த்து நிற்க வைத்தவள் அவள்
செய்கை அறியாதவன் எனக்கு
புன்னகை அணிவித்தவள் அவள்
வன்முறை செய்தவன் என்னை
வண்ணச் சிறையிலிளிட்டவள் அவள்
என் பெயரின் அர்த்தம் தந்தவள்
இன்று என் பெயர் தாங்குகிறாள்
cover photo : by Darelle from pixaby
Love,
Mani kannan
click here to subscribe...
Click here to suggest a situation/topic to write about..
留言