வாழ்வு நீதானே வானவில்லாளே..
தோன்று அருகினிலே வாள் விழியாளே..
என் வழிநின்று திசை மாற்றி நீ போனதால்..
என் அன்றாடம் அழகானதால்..
நீயும் மறைய நானும் கலங்க
விழியில் என்றும் மழையே..
மழையில் நனைந்தும் அருகவில்லை
நீ வரைந்த ஓவியம்
திசைகள் மறந்து திரிந்த போது
தேடல் மறக்கச் செய்தாய்.
கனவுப் பயணம் செல்கையில்
கடைசி வழிப் பலகையாய்
இருப்பாய் நீயே ஆதலால்.
நாமும் கூட தேகம் நடுங்க
மொழியும் நமது விழிகளே
ஓசை இல்லை வார்த்தை இல்லை
உரையாடும் நமது மௌனமே
கிளைகள் ஆடும் இலைகள் பொழியும்
நாமும் சேர்வதாலே
அபாயம் தாண்டி போனதே
நீ பொழிந்த காதலே
உடனே மீட்டுக் கொண்டு போயிடு..
love,
Mani kannan
click here to subscribe...
댓글