top of page

#T38.என் வேதியியல் அறிவாயா?

Writer's picture: Mani KannanMani Kannan

Updated: Aug 6, 2019

என் துடிப்புகள் சோதிப்பாயா

தடம்புரள வைத்தவளே


என் கைகள் உன் ரேகையின்

திசைகள் நோக்கி நீட்டுகின்றனவே


வெகுவாய் உன் நினைவுகள்

அளித்து இதயப்பசி ஆற்றினாய்


இதயத்தின் நிலை அறிய

உரிய ஒற்றை வழி

நீ என் வேதியியல் அறிவாயா


தோள்களின் பலம் சோதிக்காதே

நீ சாய்ந்தால் பலம் கூடுமே


பாரசிடாமல் தேவை இல்லை

பாராய் சிமிட்டாமல் ஒருமுறை


விருந்தாளியாய் வந்த காயங்கள்

விரும்பியே நானும் நோயாளி ஆனேன்


தறிகெட்டு ஓடுது இங்கே

காதல் வந்த அறிகுறிகள்


சுகம் செய்திடவே நீயும்

அகிம்சை முறையில் செய்வாயா

ஒரு அறுவை சிகிச்சை


அபாய நிலையை தாண்டிடவே

நின் வாச ஆக்சிஜன் தருவாயா


என் அனிச்சை செயல்கள்

யாவும் இங்கே உன் ஆட்சியில்!


சூழல் ஏற்க இயலவில்லை

உன் இதயமானி கொண்டு

என் இதயத்தின் ஏழல் அறிவாயா?


love,


Mani kannan


Click here to subscribe...


click here to suggest a topic/situation to write about..

 
 
 

Comentários


bottom of page