நெடிய மலைத் தொடரில்
என்னைத் தேடிய என் பயணம்
உயரச் செல்கையிலே உச்சி காண்கையிலே
எனக்குள் ஆழ்த்திருந்தேன்!
அடிவாரம் வரும் வழியில் எனை விட்டுப்
பிரிந்திருந்தேன்! உயரே பறந்திருந்தேன்!
நான் இயற்கை எய்திருந்தேன்!
சிற்றருவி ஒன்று என் தேடல் கண்டு
நான் உதவவா என்றது!
சலசல என்றது, தொடு வா என்றது!
ஐயம் ஏதுமின்றி என் தேடல் கேட்டது!
இந்த சிற்றருவி கலந்து உரையாடலிலே
நான் மௌனங்கள் சேகரித்தேன்!
சலசல என்றது, தொடு வா என்றது!
ஐயம் ஏதுமின்றி என் தேடல் கேட்டது!
ஒரு நாள் தேடல்! இது முடிவிலியாகிடுமோ?
என் கண்ணில் தென்படா காற்றோ
இல்லை காலடி வீழ்கின்ற நிழலோ
யார் அறிவார் ? புதிரோ ?
கிளையை வீசிக் கொண்டே மரமும்
காற்றில் பேசியதே!
கர்வம் கொண்ட காற்றோ மறுமரம்
தேடிச் சென்றதுவே!
சலசல என்றது, தொடு வா என்றது!
ஐயம் துளியுமின்றி என் தேடல் கேட்டது!
கோபத்தில் காற்றும் வேகத்தில் வீச!
தாங்கா மரங்களும் இலைகளை உதிர்க்க!
உதிர்ந்த இலைகளும் அருவியில் வீழ!
விழுந்த இலைகளும் ஓய்வின்றி ஓட!
அந்த சிற்றருவி என்னோடு சொன்னதென்ன?
இலையெல்லாம் சொல்லாமல் சென்றதென்ன?
அந்த சிற்றருவி முடியும் இடமெது தெரியவில்லை
அறிய ஆவல் கொண்டேன்!
அறியும் நோக்கில் இலையோடு சென்றேன்
இலையோடு சென்றேன் சென்றேன்
கண்ணீர் கரைத்தேன் கரைத்தேன்
இந்த சிற்றருவி எனை எங்கு
கொண்டு சென்று சேர்த்திடுமோ?
எனை சுமந்து அருவி அழுகிறதோ அழுகிறதோ
ஆனால் அருவியிங்கே இலைகளை
ஆள்கிறதே! ஆள்கிறதே!
அன்புடன்,
மணி கண்ணன்
click here to subscribe..
コメント