எந்த காட்சி கண்முன் நடப்பினும் என் கனவின் காட்சிக்காக காத்திருக்கிறேன் கூடவே துரத்தி வருகிறேன்..
எழுதிட ஆசை கொள்கிறேன் பிறர் படித்திட மட்டுமில்லாது என் வார்த்தைகளில் அவர்கள் வாழ்ந்து பார்த்திட வேண்டும்.
பயணங்கள் செய்கிறேன் புதிய பாதைகள் தேடியே சேரிடம் அழகாய் இருப்பினும் பாதையை அதிகம் நேசிக்கிறேன்.
மொழித் தெரியா பாடலிலே என் வார்த்தைகள் சேர்க்கிறேன் வழித் தெரியா பாதை வந்தால் புதிதாய் ஒரு சேரிடம் நாடுகிறேன்.
காடே வீடாய் ஒரே ஒருநாள் மனிதனாய் ஆவேன் விலங்குகள் நடுவே. வீடே ஆனாலும் காற்றுக்கும் ஒளிக்கும் என் கதவு திறந்து வைப்பேன்.
மழை வந்து மண்ணில் வீழ என்னை மறந்து மழையில் ஆழ்கிறேன். பனிப்பாறை நடுவே அழல் மூட்டி என் ஆன்மாவை குளிர்விக்கிறேன்.
வான்குடையில் மிதந்தே வாழ்வேன் கூன்மரக் கிளையில் வானவில் காண்பேன். வழிசெல்லும் குயிலின் ஏக்கம் கேட்கிறேன் முகில் முகம் கழுவிய துளியை ரசிக்கிறேன்.
தனிமையின் உறவில் நீடிக்கிறேன் அண்மை என்பதை அன்றாடம் காண்கிறேன் தன்மை என்பதன் பலமும் அறிகிறேன் இயற்கையின் கைகளில் சிறையுருகிறேன்.
ஆழி நடுவே அமைதியில் உறைவேன். தோழி நீயென்று நிலவிடம் உரைப்பேன். பொருதனில் பொறுமையை ஒரு பயணம், பெருமகிழ்ச்சி அதிலே ஜனனம்.
வழிகளின் நெடுகே வழிகளை தொலைக்கிறேன், மொழியினை மறந்து உன்னிடம் பேசுவேன். கேழி வேண்டுமென மரத்திடம் கேட்கிறேன். வழிகள் மறந்திடவே வரமும் கேட்கிறேன்.
நதி காண்கையில் மீனாய் மாறிட வினவினேன். யதி என ஆகிறேன் உன்மடி கிடைத்திட.. இதி என்று வருமென மகிழ்வுடன் தேடுகிறேன். கதி என்ன ஆகுமோ காத்திருக்கிறேன்.
வயல்வெளி காண்கிறேன் ஏதோ விதைக்கிறேன். முயல்போன்று நான் தாவிட முயல்கிறேன். நிரல் ஒன்று இருக்காதா இந்நிலையில் நிறுத்திட, திகில் நிறைந்துமே தித்திக்கிறேன்.
தாகம் வருகையில் மேகம் பார்க்கிறேன். நீரை பொழிந்தால் முழுதும் நனைகிறேன். சேலம் போலே காற்றை உணர்கிறேன்.
யோகம் வரின் இயற்கை எய்துவேன்.
LovE,
Mani Kannan
click here to subscribe....
Commenti