#T14.விழாவே எந்நாளும்..
- Mani Kannan
- Sep 23, 2018
- 1 min read
Updated: Jan 13, 2019

விழாவே எந்நாளும் நீவந்த பின்னரே..
எந்நாளோ விழவோ கண்கள் ஏங்குதே..
வேர் இல்லாது போயினும்
வீழாது நின்றிடும்.
மார் மீது சாய்கையில்
தலை நிமிரும் காதலே.
உரையாடலூடே முத்தங்கள் பேசும்
முத்தங்களூடே உரையாடல் நிகழும்
எந்நேரம் கண்ணில் உன் பிம்பம் வேண்டும்
இளைப்பாற கொஞ்சம் உன் தோளும் வேண்டும்.
போதும் என்பதை தொலைத்தோம் ஏனடி
நம் வார்த்தைப் போரில் காதல் வெல்லுதே
ஏதேதோ வார்த்தை என்னுள்ளே பிறக்கும்
அதுயாவும் புரிய அகராதி வேண்டாம்.
எதிர்பார்க்கும் நேரம் என்றென்றும் வேண்டும்
கண்கள் தானாய் கதைபேச வேண்டும்.
உலகம் என்பதே உன்னோடிருப்பதே
நீ பார்வை வீச வார்த்தை பேச
நேசம் வீசுதே....
love,
Mani Kannan
Click here to subscribe
Comments