A parody of "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை"
கண்களில் தோன்றிடும் சிரிப்பலை
என்றென்றும் தேவையே நேரலை
சட்டென ஏனொரு தடுமாற்றம்
இருந்தும் ஏதோ நிறைவேற்றம்
தீயும் குளிர்ந்திடும் காதலை
தந்தாயே நீ எந்தன் தேவதை.
நெஞ்சத்தில் ஏற்பட்ட தாக்கத்தில்
மஞ்சமும் கெஞ்சுது தூங்கவே.
அடி ஏலா ஏலா ஏலாதி
இனி உனக்கே என்றும் ஆராதி
அருகே வந்தால் தலைகோதி
என் மொழியை கொஞ்சம் ஆமோதி
உள்ளத்திலே காதல் அசும்பு
ஓட ஓட இல்லை அலுப்பு
நீ செய்த சாலத்தால் அசைவில்லா காலங்கள்.
தன்வேலை செய்யாதே இதயத்தில் ஆரிக்கிள்.
போதுமடி ஊமை அடிகள்.
வேனில் எங்கே வேதுபிடிக்க.
வேட்பு மனு தாக்கல் செய்வேன்
மீட்பு பணி கூடாதென்று.
அமிழ்ந்தேன் அமிழ்ந்தேன் உன்னாலே
உயிரை அலுக்கி எடுக்காதே
அகழ்ந்து போனாய் எனது மனதை.
இமிழ்வதேல்லாம் உனது புகழே
நினைப்பதெல்லாம் இனிதே நிகழ
ம்ம் சொல்லு நாவும் பிறழ.
உன் சேலைப் பூவெல்லாம் ஒய்வின்றே கமழாதோ
பூந்தோட்டம் முன்னின்று ஓவென்று புகழாதோ
பொழிவாய் தேன்வாய் மொழியாலே
வெகுவாய் கவர்வாய் விழியாலே
பாய்மமே உன் காதல் இருந்தும் கிழித்தாயே
என்னோட நிலைமத்தை உன் கண்ணால் குலைத்தாயே
கண்கள் போன்ற கோளுமில்லை
தஞ்சம் வேண்டும் வழியேயில்லை
என் நாவில் நாதம் நீ தானே
மன வாயில் திறந்தே வைப்பேனே
வருகை இல்லை என்றாலே..
மேவல் இல்லை இமைகளில்.
சந்திக்குமா நமது விரல்கள்
நிந்திதாலோ நித்திரை தானே.
love,
Mani kannan
click here to subscribe...
Comments