தவழ்ந்திட கற்றேன் இனியா
அகவை முப்பதில் சரியா
தாமியில் கொம்புகள் தந்தாயே...
தரையில் நீச்சல் போட்டோம்
நுரையில் மெத்தைகள் தைத்தோம்
காலணிக்குள் கால்கள் நுழைத்தாயே.
ரெண்டு காலில் யானை நானாக வலம்வருவோம்
மிரண்டு போயி மிருகமும் நின்றிடவே இரைத்திடுவோம்
இனியா நீ சொர்க்க வாசலடா
இனியா நீ வாழ்வின் மார்க்கமடா
உன்மொழி வார்த்தைகள் தேடி அகராதியிலே சேர்ப்பேன்
அர்த்தங்கள் ஆராய்ந்திடவே தோற்பேன்
திரைப்படம் கண்டிட வேண்டி திரையரங்கம் செல்வேன்
இமைக்கா கண்களோடு உன் துலங்கல் காண்பேன்
பொய்யாய் சண்டைகள் போட்டுத்தான்
தோற்கையில் துள்ளல் போட்டோம்.
சிறிதாய் தூக்கம் வந்தாலோ
நெஞ்சம் மெத்தை ஆகும்
நடைவண்டி பிடித்து நீயும் செல்வாய்,
மிதந்து திரிவேன் நான்.
முகத்தில் பொலிவுகள் எச்சால்
அகத்தில் அமைதி தந்தாய்
சுமந்திடுவன் சுகமுடனே..
முழங்கால் நடைகள் உன்னால்
தலையணை பீரங்கி உன்னால்
நீச்சல் கற்க மிதவை நானே,,
சின்னஞ் சிறு கண்கள் கொண்டாயே
என் கனவுகள் தாங்கிடவே
மமதையோடு சொல்லித் திரிந்திடவே
அவை நடந்திடச் செய்வாயா.
தவழ்ந்திட கற்றேன் இனியா
அகவை முப்பதில் சரியா
தாமியில் கொம்புகள் தந்தாயே...
தரையில் நீச்சல் போட்டோம்
நுரையில் மெத்தைகள் தைத்தோம்
காலணிக்குள் கால்கள் நுழைத்தாயே.
ரெண்டு காலில் யானை நானாக வலம்வருவோம்
மிரண்டு போயி மிருகமும் நின்றிடவே இரைத்திடுவோம்
இனியா நீ சொர்க்க வாசலடா
இனியா நீ வாழ்வின் மார்க்கமடா
உன்மொழி வார்த்தைகள் தேடி அகராதியிலே சேர்ப்பேன்
அர்த்தங்கள் ஆராய்ந்திடவே தோற்பேன்
திரைப்படம் கண்டிட வேண்டி திரையரங்கம் செல்வேன்
இமைக்கா கண்களோடு உன் துலங்கல் காண்பேன்
பொய்யாய் சண்டைகள் போட்டுத்தான்
தோற்கையில் துள்ளல் போட்டோம்.
சிறிதாய் தூக்கம் வந்தாலோ
நெஞ்சம் மெத்தை ஆகும்
நடைவண்டி பிடித்து நீயும் செல்வாய்,
மிதந்து திரிவேன் நான்.
முகத்தில் பொலிவுகள் எச்சால்
அகத்தில் அமைதி தந்தாய்
சுமந்திடுவன் சுகமுடனே..
முழங்கால் நடைகள் உன்னால்
தலையணை பீரங்கி உன்னால்
நீச்சல் கற்க மிதவை நானே,,
சின்னஞ் சிறு கண்கள் கொண்டாயே
என் கனவுகள் தாங்கிடவே
மமதையோடு சொல்லித் திரிந்திடவே
அவை நடந்திடச் செய்வாயா.
love,
Mani kannan
click here to subscribe
Comentarios