#T20.வேற்றுமை பழகு!
- Mani Kannan
- May 22, 2019
- 1 min read
வேற்றுமை பழகு ,
ஒற்றுமை சாத்தியமாகிட.
சகிப்புத் தன்மை வேண்டாம்
சங்கமித்துக் கொள்வோம்.
வேற்றுமை பழகு,
மனமே பழகின் கோடி சொந்தம் உனக்கு!
வேற்றுமை பழகு
மனமே பழகின் இங்கு எல்லாமும் உனது!
வேற்றுமையின் சங்கமமே
இங்கு இசையாகிறது!
வேற்றுமையின் சங்கமமே
நம் திசையாகிறது!
வேற்றுமை இனிக்கும்
சகிப்புத் தன்மை இல்லாமற் போய்விடில்.
வேற்றுமை பிடிக்கும்,
வேற்றுமையில் ஒற்றுமை புரிகையில்.
வானவில் உதிர்த்து வண்ணங்கள் அறிகிறோம்!
வண்ணங்கள் குழைத்து வானவில் செய்வோம்!
Love,
Mani kannan S
Comments