மேவல் உன் மொழி கேட்க,
நீ ஆயுதம் ஏந்திய அகிம்சையடி.
ஆவல் உன் விழி காண,
நீ நிறங்கள் பொழியும் மேகமடி.
குடையென நின்ற நான் அழுவது
மழையை நீ ரசிக்கையில் தெரியாது
மழை நின்ற மறு கணம் குடையை
நீ மடிப்பதில் கண்ணீர் காணாது !
தனிமை தேடும் காதலுக்கு
நிழலும் உடன் வரா,
இருளின் இனிமை புரிகிறது.
இனிமை தேடும் காதலுக்கு
உடன் வரும் நிழலும்
நிறங்களின் உருவாய் மிளிர்கிறது!
காதலின் வழியில் நடக்காமல்
வாழ்வின் பாதை புரியாது
காதலை கடந்து போகாவிடில்
வாழ்வின் பயணம் தொடராது!
love,
Mani Kannan.
Click here to subscribe...
コメント