top of page

#T31.நாளைய நீ!

உன் முதல் துளி நம்பிக்கையில்

கருவுருகிறாய் நாளைய நீ

வெயிலில் நின்று வேர்வை

காண்கையில் தான் மின்னுகிறாய் நீ


இலக்கை நோக்கி பாதையில்

பயணிக்கையில் தான்

பயணமே இலக்கென உணர்வாய் நீ

சில தருணங்களில் பயணத்தினூடே

இலக்கை கண்டறிவாய் நீ


கால்கள் காயங்கள் கண்டாலும்

நம்பிக்கையால் பயணம் தொடர்வாய் நீ

இலக்குகள் அடையும் தருணத்தில்

இறக்கைகள் தொலைப்பாய் நீ


சிதறிய எண்ணங்கள் உன்னைச் சிதைக்கும்.

குவிந்த எண்ணங்கள் விண்ணையும் துளைக்கும்.

காத்திரு நீ பார்வைகள் குவிக்கும் வரை

வீற்றிரு நீ இழக்க ஏதுமில்லை என.


உன் விழி கண்டிடும் தூரமல்ல,

நீ செல்ல வேண்டிய தூரம்.

வளி போகின்ற வழியே உன் வழி.

வளி போகின்ற தூரமே உன் பயணம்.


புதைக்கப்பட்டேன் என்ற விதை மக்கும்

விதைக்கப்பட்டேன் என்ற விதை முளைக்கும்

நினைவில் கொள், நினைவாய் கொள்,

சிதைக்கப் படவில்லை, செதுக்கப் படுகிறாய் நீ!


Love,


Mani kannan


Click here to subscribe..



1 commento


rajesh29783
rajesh29783
09 lug 2019

Splendid thought, keep going bro..

Mi piace
bottom of page