நீர் இன்றி அமையாது என் உலகம்
நீவிர் நான் ஏற்றுக் கொண்ட சமயம்
வேர் சென்று பூத்தீரே மலராக,
என்னுள் நின்றீரே மலரகமாக.
அசையும் சொத்தாக உன் கண்கள் கேட்கிறேன்
அசையா சொத்தாக உன் பார்வை கேட்கிறேன்
வழியாய் உன் விரல் நீளுமா?
சுழியாய் நீ வலம் இருப்பாயா?
நின் கருவிழி அசைவில் சுழலுது என் பூமி,
என் விழிகளை கைப்பற்றியது உன் தாமி.
சிதறும் மழைத் துளியாய் விழுகிறாய்,
மயிலம் கொண்டெனில் காயம் செய்கிறாய்.
விடியல் தோறும் இடறல் தருகிறாய்,
உலவல் தோறும் முனகல் தருகிறாய்.
நிழலாய் நான் உன்னை கேட்கிறேன்,
நெகிழியாய் உன் நினைவுகள் கேட்கிறேன்.
இரவுகளில் என்னைத் துருவுகிறாய்,
என்னருகில் மட்டும் மறைகின்றாய்.
தினங்கள் புதிதாகும் தினம் தோறும்
எந்தன் மனமே உந்தன் சமஸ்தானம்
இடம் பொருள் காலம் மறக்க வைத்த நீ,
இலையுதிர்க் காலம் கொண்டு வந்தாய்.
இடிகளில் இசையைக் காட்டினாய்,
மின்னலில் மின்மினி காட்டினாய்.
சரளமாய் நான் மௌனம் பேசுகிறேன்.
சுலபமாய் நான் காதல் சுமக்கிறேன்.
காற்றில் பொன் துகள்கள் தூவினாய்,
நேற்றில் சில திருத்தங்கள் செய்தாய்.
அதிகாரமற்ற திருக்குறளாய்
கேட்கிறேன் உன் திருக் குரலை.
வண்ணங்கள் வாசம் வீசக் காண்கிறேன்
உன்னோடு நேசம் கொண்ட பின்.
உருவற்ற உறுபொருள் இவளை
உனக்கே உரியவள் என்பாயா?
Love,
Mani kannan
Click here to subscribe..
Click here to suggest a topic/situation to write about...
Comments