#T24.நானே நானாய்!
- Mani Kannan
- Jun 20, 2019
- 1 min read
என்னுள் கலந்திட துடிக்கும் உலகம்,
என்னுள் மூழ்கிடத் துடிக்கும் நான்,
எளிதன்று நானே நானாய் இருப்பது!
இருந்து விடின் கடினமல்ல ஏதும்!
காண்பன யாவும் காட்டுகிறது என்னை
வீண் என நின்றவன் தூண் ஆகிறேன்
கேள்விகள் விழுங்கியவன்
பதில்களை சுவாசிக்கிறேன்.
தனித்துவம் தேடியே தனியாக,
விசித்திரம் விதைத்த விந்தையாக,
விமர்சனம் வீழ்த்தும் வீரனாக ,
அகங்காரம் அணிந்த அன்பனாக,
நடை பழகுகிறேன் தடைகளின் மேலே,
விடைகள் காண்கிறேன் கேள்விகளூடே!
காண்கிறேன் அனைத்தும் நானாக
காணமல் போகிறேன் காற்றாக
வேண்டுகிறேன் இந்நிலையே வேண்டுமென,
பேணுகிறேன் என்னைச் சிறு மதலையாக!
Love,
Mani Kannan S
click here to subscribe...
Comments