ஆளும் மழலை நீயே!
கண்கள் சிமிட்டிக் கொண்டே,
புரியா மொழியில் கதைத்தே,
எனை புதிதாக மாற்றினாய்!
மீழும் தருணங்கள் யாவும்
விழிகளின் மொழியால் நீயே!
இலக்கணங்கள் புதைத்தே,
என் கவிதைகள் எழுதிடுவாயே!
போதை நீ பாதை நீ
கொண்டாடும் தடுமாற்றம் நீ
யானம் நீ மாகம் நீ
எக்காலநிலைக்கும் பானம் நீ
எண்ணுதல் போலே என்னுள் இருப்பாய்!
உன் நுதல் பொட்டில் வெளிச்சம் தருவாய்!
அக்கினி அற்ற ஆதவன் உன்னால்,
நடுங்கிடும் கோடைப் பகலிலும் தன்னால்!
வையகமே எனைச் சுற்றி வந்தாய்,
வைதலிலும் இனி வல்லினம் இல்லை!
உன் யாவைகள் பதில் காணவே
என் விடைகள் தொலைத்து நிற்கிறேன்!
உன் வார்த்தைகள் கவிதை ஆகவே
இலக்கண நடைகள் கற்கிறேன்!
உன் ஆசையும் என் கனாவும்
ஒன்றே தான் என்றே அறிகிறேன்
என் கண்களில் நான் காண்கிறேன்
நீ கண்கள் முன்னே கண்டிட!
ஓராயிரம் கண்களால் உலகம்
நம்மைப் பார்க்க,
நாணத் தேவையில்லை அன்பே
நம் கண்களில்
இரு அழகிய உலகங்கள் காணலாம்!
Love,
Mani kannan
click here to subscribe...
Komentáře