#T8.தேடல் தொல்லை..
- Mani Kannan
- Apr 23, 2018
- 1 min read

தேடி நான் அலைந்தேன்
தேடல் தொலைய வைத்தாய்
தேடல் தொலைந்த தென்றேன்
மீண்டும் தொடர வைத்தாய்
என்னை தேடலின் துணையாய் மாற்றி விட்டாய்.
கண்களை கழற்றி காற்றில் விட்டாய்.
தேடல் தொல்லை இல்லை எல்லை.
தேடும் நானோ இல்லை இல்லை
வாழ்கையில் உந்தன் உருவமது உலகத்தின் அறிமுகமே..
அறிமுகம் செய்திட்ட மறுகணமே உருவமும் மாறியதே..
முகவுரை தாண்டி தொடரும் முன்னமே
முடிவுரை தந்து ஓடி விட்டாய்.
தேடல் தொல்லை இல்லை எல்லை.
தேடும் நானோ இல்லை இல்லை
கூடல் கொண்டிடும் முகில் நடுவே
முகம் வர எதிர்பார்த்தேன்.
முகில் விட்டு வளியோடு பறந்து விட்டாள்.
வழி எங்கும் தேடல் விதைத்திருந்தேன்...
வளியிடம் கேட்டு வழி பெறவே..
நதியுடன் சேர்ந்து ஆழி சென்றாய்.
தேடல் தொல்லை இல்லை எல்லை.
சிரித்த கண்கள் தொல்லை தொல்லை.
love,
Mani kannnan
Click here to subscribe...
Opmerkingen