#T6.எந்தை
- Mani Kannan
- Apr 17, 2018
- 1 min read

உன் கைகளில் தவழ்ந்து நீச்சல் கற்றிலேன்
உன் பாதணிகள் அணிந்து திரிந்திலேன்
உன் கோபங்களால் அஞ்சி நடுங்கிலேன்
உன் மார்பு மெத்தையில் தூங்கிலேன்.
உன்தோள் அமர்ந்து உலகம் பார்த்திலேன்
உன் பெயரை மட்டுமே தாங்குகின்றேன்,
உன்னைத் தாங்கும் வரம் பெற்றிலேன்.
உன் புகைப்படம் மட்டுமே பார்க்கிறேன்,
உன்னைப் பார்க்கும் வரம் பெற்றிலேன்.
நினைவுகூர நினைவுகள் என்னிடம் இல்லை,
கற்பனையிலன்றி அதைப் பெற்றிலேன்..
உன் வாய்மொழியை என் பிஞ்சிமொழி உரைத்ததில்லை,
உன் முதுகுத் தேரில் வலம் வந்ததில்லை.
என் தேவைகள் உரைத்திட நீ இங்கு இல்லை
நீயே தேவையென உரைக்கிறேன்.
மறைந்து ஆட வேண்டிய நான்
உன்னை மறந்து வாடலானேன்
நீ மரித்து போனதாலே..
நான் நானென்று நீ அறிவாய
நீ நீயென்று நான் அறியேன்.
உன்னோடு பயணம் செய்திலேன்,
இன்று கற்பனையில் செய்கிறேன்..
click here to subscribe...
Comments