top of page

#T5.முதல் பாடல்




மழையென பொழிந்தாயே வறண்ட நிலத்தினிலே..

இன்னமும் பொழிகிறாய் கண்களில் எதனாலே..

இன்றோ என்றோ ஏக்கம் எகிறிடுதே

ஏக்கம் ஏனோ என்மேல் காதல் வயப்படுதே.

வேண்டுமே உன் பிம்பமே

என் கண்களில் என் கண்களில்..

சொற்கள் தேடிடும் நம் முயக்கமே..

அது வேண்டுமே அது வேண்டுமே.. .

..மழையென..

எங்கே எங்கே கோர்த்துச் சென்ற விரல்கள்..

இணையும் போதெல்லாம் அவை இசைக்குமல்லவா..

வாழ்வே வீணே நீ சேரா விட்டால்

மறுபிறவி வேண்டாம் என்பேன் நீயும் சேர்ந்தே விட்டால்

வறண்டிருந்த நெஞ்சம் எங்கும்

தூவிச் சென்ற காதல் விதைகள்

பெருக்கெடுத்து காதல் ஓட கூடவே ஓடக் கண்டேன்

...மழையென..

சாயேனே நானே என மமதை கொண்டேன்.

நான் கொண்ட மாற்றமது உன்னால் என்பேன்

குரல் தேடி வருவேனே காற்றைப் போலே..

கனவே அடி அதுவே உன்னைச் சேர்வது..

வேறு கிரகம் சென்றால் கூட..உடன் வேண்டும் நீயே..

உன் நாட்கள் அறியாதே என் நாட்கள் கொண்ட எல்லை..

அரைநாள் நோயோ என்றேன்..

ஆட்கொல்லி அல்லல் செய்தாய்...

அல்லல்கள் கடினம் இல்லை..

கீறல் கொண்ட மனமும் இன்று வகையாகுதே..

...மழையென..


 
 
 

Comments


bottom of page