top of page

#T47.கீறல் கொண்ட...(parody of ஆலங்குருவிகளா..)

கீறல் கொண்ட விளைநிலமே

உன் வலிகள் போற்றேனோ

கீறல் கொண்ட விளைநிலமே

உன் கீறல்கள் ஆற்றேனோ


அகழ்வாரைத் தாங்காதோ பூமி

பசியாற்ற கொண்டோமே பிறவி

இது இனிக்கும்


மண்ணில் வீழ்கின்ற விதைகள் யாவும்

உணவாகி உயிராய் பூக்குமே

இங்கே இல்லாமை இல்லாது போகும்

கொடையுள்ளம் கொண்டாலே


பாழாகிப் போன உலகத்துல

உனக்கும் உனக்குமே தூரம் இருக்கு

விழுந்த போதும் ஒன்றாக ஓடிட

சொல்ல மழை இருக்கு


நினைவிடம் அமைக்கிற எதுக்கு

ஒரு மரம் நட்டு வைத்திட பழகு

கிளிகள் குயில்கள் ஜன்னல் வரும்

ஜன்னல் தந்த மரம் இப்போ வாடி இருக்கு


அசையும் யாவும் அன்பினிலே

அதீதம் எல்லாம் கோடை செய்யவே


அவ்வப்போது நமக்காக அழுது

சிரிக்க வைக்கிறது முகிலு


இந்த வைகையில் எல்லாமும்

எல்லார்க்கும் என்றான போதும்

தனதென்று தான் போற்றுவான்

இயற்கையின் செய்கையை கூட

பூ தூவியே தூற்றுவான்!


Love,



Click here to subscribe..

Click here to suggest a topic/situation to write about...

Cover : Image by Free-Photos from Pixabay



 
 
 

Σχόλια


bottom of page