top of page

#T46.உன் வழியில! (PARODY OF "உனக்காக வாழ நெனைக்கிறேன்")

Writer's picture: Mani KannanMani Kannan

உன் வழியில நானும் நடக்கிறேன்

உன் விழி பார்த்து வழி காண்கிறேன்

கைகோர்த்து நடக்கையில்

மிதந்த படி நடந்திடுவேன்


என் வருங்காலம் வாசம் கொள்ள

உன் ரேகையில் இணைத்திடுவேன்

உன் வழியில உன் விழியில


திசை காட்டும் விரல் தானோ

மலை போத்தும் முகில் தானோ


உடன் நீ வரும் தூரம் தான்

நான் போகிறேன்

தினம் உன் பார்வை பட்டால் தான்

பகலை உணர்கிறேன்


வலியொன்று இதமா

வானவில் மின்மினியாக

துணை நீ உயிரின் ஓரமா


விழிக்குள்ள மலையைப் பாத்து மகிழ்ந்திடணும்

மொழிக்குள்ள எழுத்தாக இருந்திடனும்

ஒரே குடை நனைஞ்சபடி கதைச்சிக்கணும்

கண்ணில் மழை இல்லாம பாத்துக்கணும்


மடி நிலா மாடி நகல்

சோகம் சுகம் பயம் இன்பம்

தீரும் மட்டும் சாஞ்சிக்கணும்


Love,



Click here to subscribe..

Click here to suggest a topic/situation to write about...


Image by Jonny Lindner from Pixabay

Comments


bottom of page