எங்களுடன் இருந்தீர்கள்
மக்களாய் வாழ்ந்தோம்
எங்கோ சென்றீர்கள்
மாக்களாய் நாங்களானோம்
எங்கள் ஆறாம் அறிவே
நீங்களன்றோ அஃறிணைகளே
சென்ற நூற்றாண்டில்
நீங்கள் எந்தன் உறவினர்களே
சேய் ஒன்றாய் நாய்
உனைக் கண்டோம்
எங்கள் திராணிகளே
நீங்களன்றோ பிராணிகளே
மதனம் தேடி நடக்கலானேன்
மனிதம் தொலைந்ததை உணர்ந்தேன்
கானகத்தில் இவையிரண்டும்
களித்திருக்க கண்டேன்!
திருடிச் சென்றான் மனிதத்தை
என் பொருள் திருடும் முன்
கொன்று விட்டான் மனிதத்தை
வாழ்கிறேன் என்ற எண்ணத்தில்
மனிதர்கள் மிருகங்கள்
ஆகிடல் இயலாது
மிருகங்கள் மனிதர்கள்
ஆகிடல் எளிது
சரணாலயங்கள் இங்கே
அன்பின் ஆலயங்கள்
காடுகளெல்லாம் இங்கே
அழுக்காறற்ற வீடுகள்
மனிதம் ஒரு நாள் மலரும்
அன்று இங்கே போர் இருக்காது
அன்று இங்கே கடவுச் சீட்டு இருக்காது
அன்று இங்கே இராணுவம் இளைப்பாறும்
அன்று இங்கே எல்லைகளில் வெளிகள் இருக்காது
மனிதம் மலராவிடின்
மனிதர்கள் மாளட்டும்
மயில்களுக்கு இரையாகட்டும்
பகுத்தறிய இயலாப்
பறவைகளுக்கு உணவாகட்டும்
ஆறாம் அறிவு பெற்றிருத்தல்
மனிதம் என்ற நிலை மாறி
ஆறாம் அறிவு களைதல்
மனிதம் என்றானதே!
பகுத்தறிய இயலா
ஒன்றை உடன் வளர்ப்போம்
மனிதம் கற்போம்!
Love,
Click here to subscribe..
Click here to suggest a topic/situation to write about...
cover : Image by Jonny Lindner from Pixabay
Comentarii