தனிப் பெருந்துணையே நீ
இனி வழித் துணையே
பனி சுமக்கும் மலரே நீ
தனித்துவ தாரகையே
துணையாய் வருவாய் நீ
கொஞ்சும் குறிஞ்சிச் திணையே
தலைசாய் அகிலே நீ
சர்வமுமான பன்மமே
தூரமாய் நிற்பாய் நீ
தூறலாய் விழுவாய் நீ
மின்மினிகள் பொழிவாய் நீ
பின்னணியை நிலைப்பாய் நீ
நினைவுகள் தாராயோ நீ
கரைகள் புரளா வண்ணம்
நிறைவுகள் தாராயோ நீ
தேடல்கள் தீரா வண்ணம்
கோரிடு நீ
என் காதல் நாவலாகும்
வாதிடு நீ
வல்லினம் காணப் போகும்
கைகொடு நீ
கவலைகள் கரைந்து போகும்
எழில் கொண்ட நிலவின்
சாயலாய் இவளிங்கே
குயிலின் குரலில்
மயிலாய் இவளிங்கே
இருள் அணைக்கும்
தழலாய் இவளிங்கே
Love,
Mani kannan
Cover : Image by thedigitalway from pixaby
Click here to subscribe..
Click here to suggest a topic/situation to write about...
Comentarios