இனிமேல் மழைக்காலம்
கானகத்தில் அல்ல,கண்களில்!
ஆள்கின்ற உன் நினைவுகள்
ஆறுதலும் உடன் அளிக்கும்
சோர்வற்ற என் இதயம்
இரண்டிற்கும் செவி சாய்க்கும்
நீங்கிப் போனாய் நீயாக
நோக்கி நிற்கிறேன் சிலையாக
அழுகை ஒன்றே ஆறுதலாய்
தூரிகையே நீயின்று அழிப்பானாய்
விழிகளில் வெள்ளம் பெருகும்
பள்ளங்கள் வழியாய் தெரியும்
தனிமை நட்பு பாராட்டும்
நிலமை என்றுமே போராட்டம்
நடக்கையில் முன்னே ஓடும் நினைவுகள்
தூங்குகையில் தோன்றிடும் உன் பிம்பங்கள்
நீயின்றி அமைந்த இவ்வுலகம்
நீரில்லா உலகினும கொடிது
தேங்கிய துளிகள் மழையாய்
விழும் நான் இமைத்திடவே
மேகமாய் நான் அழுவேன் தாராளமாய்
தாவமே நீ அறுந்து தனி ஆளாய்
Love,
Mani kannan
Click here to subscribe..
Click here to suggest a topic/situation to write about...
Comments