தமிழ் இலக்கணம் படித்த பொழுதில் எழுந்தது!
ஆகுபெயர் ஆகினாள்
ஊடுபயிராய் வளர்கிறாள்
முதலெழுத்து என்னை
சார்பெழுத்து ஆக்கினாள்
என் உயிர் அளபெடுக்கச் செய்தாள்
மலர் மூட்டையால் மனதை நிறைத்தாள்
என் ஆயுதங்கள் குறுகிட வைத்தாள்
ஐகாரம் நிறைந்திட வைத்தாள்
சொல் போன்று நின்றவள்
சொற்றொடராய் நீள்கிறாள்
மருவாத என்னை மருவிடச்
செய்த உரிச்சொல் அவள்
நான் அணிவன வற்றிற்க்கு
இலக்கணம் கொடுத்தாள்
ரௌத்திரம் நிறைந்த வாழ்வில்
கவித்துவம் தந்து போனாள்
இடுகுறிகள் இல்லை வாழ்வில்
எதுகைகள் தந்து போனாள்
மோதல்கள் நிறைந்த வாழ்வில்
மோனைகள் தந்து போனாள்
கர்ஜித்து திரிந்தவன் என்னை
கற்பனையில் தூங்க வைத்தாள்
வருந்துதல் சூழ்ந்த வாழ்வில்
வானவில் வரைந்தாள்
தன்வினை அறியாதான் வாழ்விற்கு
வர்ணனை செய்து போனாள்.
துணையான எழுத்தாய் வந்தாள்
இதனமான வானிலை தந்தாள்
பழுதுகள் நிறைந்த எந்தன்
சொற்களால் கவிதைகள் செய்தாள்
இவ்வாறே எனது
ஆகுபெயராய் நிற்கிறாள்!
யுவதியவள் என்
பிரதியாய் ஆகிறாள்!
love,
Mani kannan
Click here to subscribe..
click here to suggest a situation/ topic to write about..
Comments