நீளும் கைகள் வாழட்டும்,
கனத்தாலே அவை தாழட்டும்!
ஏங்கும் இதயத்தில் பாயட்டும்,
கருணைப் பெருக்கெடுத்த நதிகள்!
துவளும் தோள்களில் தட்டட்டும்,
உங்கள் தன்னம்பிக்கை கைகள்!
உங்கள் சொற்கள் பூக்கட்டும்,
மௌனமாய் வறண்ட நிலங்களில்!
பசியைப் போக்கிட விரையட்டும்,
பதப்படுத்தப் படவுள்ள உணவுகள்!
நீ கேட்கிறாய் கேட்க
இயலாதவர்களின் பிரதிநிதியாக,
நீ பார்க்கிறாய் காண
இயலாதவர்களின் பிரதிநிதியாக,
நீ பேசுகிறாய் பேச
இயலாதவர்களின் பிரதிநிதியாக.
உனக்காக மட்டும் என்று
ஒருபோதும் வேண்டாம்
"உன்னால் தான்" என்று
என்றுமே இருக்கட்டும்
மாற்றான் விதைத்து சென்றதை,
அறுவடை செய்திட துடிக்காதே!
விதைத்து விட்டு விலகிச் செல்,
உலகம் அறுவடை செய்யட்டும்!
உன் கேள்விகள் இவ்வுலகத்திற்கும்
பதில் கொண்டு சேர்க்கட்டும்!
கொண்டாய் நீ இங்கே
கொடை செய்திடவே!
கற்றாய் நீயும் இங்கே
கயவர்க்கும் கற்பித்திடவே!
எதிரில் இருக்கும் கருந்திரை
மீது வண்ணங்கள் வீசிடு!
அவர்கள்தம் கண்திரை முன்னே
எதிர்காலம் காட்டிடு!
அவர்கட்கான முன்னுரை ஒன்றை
உன் முகவரியின்றி எழுதிடு!
உன்னவன் இல்லை நீயிங்கே,
உலகிற்கே பிரதிநிதி நீ!
"உனது மட்டும்" என்று ஏதுமில்லை,
ஆனால் அனைத்தும் இங்கே உனதே!
cover : Image by Thomas Mühl from Pixabay
love,
Mani kannan
Click here to subscribe..
click here to suggest a situation/ topic to write about..
Commentaires