#T35.விண்மீன்கள் வேண்டாம்!
- Mani Kannan
- Jul 31, 2019
- 1 min read
Updated: Aug 6, 2019
விண்மீன் கூட்டங்கள் வேண்டாம்
விழியின் சிமிட்டல்கள் போதும்.
வன்மீன் கூடங்கள் வேண்டாம்
சிமிட்டா விழிகள் போதும்.
விழிகளின் ஆலோசனை இன்றி
பாதங்கள் நடக்கிறதே
தொலைதூரம் என்றால் கூட
தொடர்ந்திட துடிக்கிறதே
இங்கு அழலின் தாக்கம்
நிழலிலும் வீசும்.
தாவி வந்த நினைவுகள்
நீவி விட்டதோ நோவுகள்
தூறப் பட்டதே சோகங்கள்
தூரம் போனதே ஆசைகள்
உன் நினைவுகள் சூழ்ந்த
தீவில் தனியாய் நான் இங்கே
நீந்துதல் அறிந்தும்
விடுபட வழிகள் தெரிந்தும்
புன்முறுவல் பூத்தபடியே
மூழ்குகிறேன் மெதுவாக
கரைகிறேன் கனிவாக!
Love,
Mani kannan
Click here to subscribe..
Click here to suggest a topic/situation to write about...
Comentários