top of page

#T33.காதல் வந்த காலம்!

Jul 21, 2019
1 min read

பூக்கள் நிரப்பிய துப்பாக்கியால்

நான் துண்டாடப் பட்ட காலம்


தண்ணீர் பலூன்களால் நான்

சரமாரியாய் தாக்கப்பட்ட காலம்


நெரிசல் மிகுந்த சாலைகளிலும்

நெஞ்சம் மட்டும் பறந்த காலம்


செல்லிடத் தொலைபேசி அழைப்பில்

செவ்வாய் கிரகம் சென்று வந்த காலம்


நீ பார்த்த பார்வைகள் போர்வையாய்

மாறி தூங்க வைத்த காலம்


மலர்களாய் இலைகள் இமைகளின்

இடையினில் நின்ற காலம்


ஓடு மீன் ஓட உறுமீன் வந்து

விழுங்கிச் சென்ற காலம்


உனக்காக சிரிக்கும் உன் கண்கள்

பிரச்சாரம் செய்த காலம்


கூர்முள் குத்துகையிலும்

கூசல் உணர்ந்த காலம்.


கண்ணாடி முன்னின்று நான் அழகென

சொல் என்று மன்றாடிய காலம்


பிடிவாதம் பிடித்த கடிகாரம்

அவகாசம் கேட்ட அன்றாடம்


நினைவில் நில்லாத நிகழ் காலம்

வரவேற்கத் துடித்த வருங்காலம்

ஏனோ வெறுத்த கடந்த காலம்


ஏனெனில் அது காதல் வந்த காலம்

இது நினைவு கூறும் காலம்



Cover : Photo by Everton Vila on Unsplash


love,


Mani kannan


click here to subscribe

Comments


bottom of page