top of page

#T32.அகில் தூறிடும் முகில்...

அகில் தூறிடும் முகில் அவள்

துயில் திருடிடும் குயில் அவள்

எழில் கொஞ்சும் அனல் அவள்

தாண்டிடத் தோன்றும் மதில் அவள்


என் பதில்களுக்கு பதில் அவள்

என் குரலில் ஒளிந்த குறில் அவள்


பூவினங்களின் அசல் அவள்

புன்னகையின் நிரல் அவள்


வெண்மதி அவளின் நிழல் அவள்

தோகையற்ற மயில் அவள்


இன்னிசை கொண்ட நெடில் அவள்

மேகங்கள் துயிலும் குடில் அவள்


விண்மீன்கள் விழுங்கும் கடல் அவள்

வருமீன்கள் விழுங்கும் கயல் அவள்


பனி மேல் விழும் வெயில் அவள்

பூக்களைத் தூறும் புயல் அவள்


love,


Mani Kannan


Click here to subscribe..


Comments


bottom of page