#T29. நீ அளபெடுத்தாய்!
- Mani Kannan
- Jun 27, 2019
- 1 min read
Updated: Aug 18, 2019
யாய் பிரிவால் அழும் சேயாய்,
தேய்ந்திடும் என் உயிர் உன்னாலே!
பிரிவென்பது எளிதன்று,
இங்கு எளிதானது பிரிவென்பது!
பிரிவின் பளுவில்
உயிர் மென்மையாகுது.
பிரிவின் உறவில்
வாழ்வு மேன்மையாகுது.
நீ அலையானாய்
வந்து வந்து செல்வதற்கு,
நான் சிலையானேன்
உன்னில் மூழ்கிப் போவதற்கு.
நீ அளபெடுத்தாய்
எந்தன் ஓசை குறைவதற்கு,
நான் மொழி மறந்தேன்
உந்தன் ஓசை கேட்பதற்கு.
கணங்கள் எல்லாம்
கனங்களே உன் நினைவில்!
பதுங்கி நின்ற என் உயிரில்
பாயுதடி உன் நினைவு வில்!
ஏன் என்னை நீங்கினாய் -
என் கேள்வியானது
ஏன் என்னை நீங்கினாய் -
உன் பதிலுமானது.
Love,
Mani Kannan S
Click here to subscribe...
Comments