top of page

#T25.மொழியானாள்


மொழியானாள் என் அகராதி திருடியவள்

வழியானாள் என் கண்களைக் கட்டியவள்


இசையானாள் மௌனங்கள் பரிசளித்தவள்

விசையானாள் நங்கூரம் இட்டவள்


வரமானாள் கரம் சேராது போனவள்

பலமானாள் என் உரு குலைத்தவள்


அளபெடையானாள் ஓசைக் குறைத்தவள்

மொழிநடையானாள் உழறச் செய்தவள்


நிணலாகிறாள் நீங்கிச் சென்றவள்

நிரலாகிறாள் அனுமதி மறுத்தவள்


அன்றாடமானாள் திண்டாடச் செய்தவள்

வாய்மையிடமாகிறாள் பொய்மையானவள்



Love,


Mani Kannan



click here to subscribe..




Comentários


bottom of page