#T23.எண்ணுவதெல்லாம் எட்டுவதற்கே!
- Mani Kannan
- Jun 16, 2019
- 1 min read
எண்ணிய யாவுமே எட்டிட
வேண்டியே யாத்திரை போகிறேன்.
புழுதியின் புயலிலே மண் வாசனை
பரப்பிட மழைத்துளி ஆகிறேன்.
எனக்கும் இங்கு ஓசைகள் உண்டு
உணர்த்திட தவிர்க்கிறேன்
குழுயிசையை இன்று.
புதிதாய் தோன்றுது வாழ்க்கை இன்று,
மதுவாய் மாறுது கனவுகள் இன்று.
அடையாளம் தேடி அலைந்தவள் இன்று,
நடக்கிறேன் பாதங்கள் பதித்தே!
சுற்றிலும் சுவர்கள் என்றே பயந்தேன்,
மேற்கூரை இல்லையென இன்றே உணர்ந்தேன்!
உலகம் சுற்றிட ஆசைகள் இல்லை,
சுற்றும் உலகம் என்னை நோக்கட்டும்.
ஒளியை காண்கையில் கூசிய கண்கள்,
இன்று காண்கிறது அவை விழுமிடம்.
பலமறியாமல் ஊதுபையில் அடைபட்டவள்
வளிமண்டலம் செல்கிறேன் புயலாக!
Love,
Mani kannan
Comments