கனவுகள் வாழப் போகிறாள்
கண்ணீர் சூழ சிரிக்கிறாள்
தாழச் செய்கிறாள் தன்
விழிகளை கண்ணீர் கடலில்
என் கண்களைக் சுத்தம் செய்ய
சொல்லிச் செல்கிறாள் கண்ணீரில்.
காத்திருப்பேன் உன் கனவின்
காட்சிகள் மெய்ப்படுவது கண்டிட
கனவுகள் நீ கொள்வாய்
அதை நிறைவேற்றுவதை
என் கனவாய் கொள்கிறேன்
தயக்கங்கள் துறப்பாய்
தடங்களை திறப்பாய்
கலகங்கள் மறப்பாய் வழித்
துணைகளை மறுப்பாய்
பின்னணியில் நானில்லை
ஓரணியாய் நாம் இங்கே
உன் வேகம் நீ அறியாய்
உன் போதம் நீ அறியாய்
உனதென்றே நீ அறிந்தும்
ஒதுங்கி நிற்கிறாய் ஏனோ?
போ நீ உன் பார்வைகள் வீசியே
பாதைகள் யாவும் உன் வசமே
போ நீ உன் போர்வைகள் உதறியே
காலநிலைகள் உன் காலடியிலே
கேலிகள் அதையும்
கிண்டல்கள் இதையும்
தாங்கிடவா நீ வாழ்கின்றாய்?
தலைமுடி என நீ அதனை
பிடுங்கி எறிந்திடு வா!
நீ விழவில்லை
எழப் போகின்றாய்
நீ வினா இல்லை
இந்த உலகின் கனவுகள்
உன் வெற்றியில்
பாதையில் பயணிக்குமே
களைப்பாயினும்
இளைப்பார மாட்டாய்!
இறுதி நொடியே ஆயினும்
உன் இன்முகம் மாற்றாய்!
love,
Mani Kannan
Comments