#T21.ஏனென்று கேளாதே..
- Mani Kannan
- Jun 13, 2019
- 1 min read
ஏனென்று கேளாதே
யானென்று கூறாதே
தொலைதூரம் நாம் போக
துணையே நீ வந்திடு!
மகரந்தம் போலே
மகரங்கள் உதிரும்
உதிர்த்திட்ட போதும்
உரையாடல் தொடரும்.
குறிலாக நான் வாழ
துணையாக நீ சேர
நாமாக நான் மாற
நெடிலாக நீள்கின்றேன்.
துறவறம் நான் பூண்டாலும்
மதமாவாய் நீ அன்பே
வரவினங்கள் எல்லாம் இங்கே
நீ மொழிந்த வாய்மொழிகள்
நீள்கின்ற மௌனங்கள்
வாள் போலே நினைவுகள்
பிடிவாத கோரிக்கைகள்- நான்
அணியாத அணிகலன்கள்.
முடியாத முயக்கங்கள்,
மகரமெய் தாண்டியும்
மனமுவந்தே தொடரும்.
மனமின்றி ஒரு பயணம்
அதை மேற்கொண்டோம்
மணம் முற்றி அதில்
ஏனோ மயங்கி நின்றோம்
நீ என் மங்கலம்
உரைக்கிலனே வல்லினம்.
சிலையென நீ ஆனாலும்
மலையென நீ நின்றாலும்
கலையொன்றைக் கற்பேன்
மீளாமல் உன்னில் ஆழ.
காந்த அலைகள் கமழ்கின்ற
கண் கொண்டு எனை ஈர்த்தாய்
பாட்மம் பாய்ந்தோட
நீர் அலைகள் தந்தாய்.
முடிவேது இதில்
இது மலை மேலே அகில்.
love,
Mani Kannan
Comments