top of page

#T2.அல்லள்........

Writer's picture: Mani KannanMani Kannan

Updated: Feb 20, 2019



நினைவில் நின்றவள் அல்லள். என் நினைவகம் தின்றவள்

நெஞ்சில் நின்ற பெயர் கொண்டவளல்லள். எப்பெயர் பொருந்துமென ஆராயச் செய்தவள்.

வலிய தோள்கள்

இல்லை யெனினும் அவள் தோளை பாரமாக்க சோகங்கள் இல்லாமல் செய்தவள்.


​​நிலவின் நகல் அல்லள் நிலவின் தாமி அவள்.

நகரும் வேளையில் பின்வரும் நிலவல்லள் எனைப் பின்வரச் செய்த நிலவவள்.

இலக்கண நடையற்ற பாடல் அவள்.எனினும் எனினும் நான் கொண்ட வரையறைகளின் மூட்டையானவள்.

என் சிறிய உலகின் ஒற்றைக் கிரகம் அவள்

என் பலநாள் தேடலின் ஒற்றை முடிவுமவள்

என்னுள் பேரழிவு நிகழ்த்தியவள் பின்னர் நிவாரணமாய் நினைவுகளை விட்டுச் சென்றவள்​​

நேற்று தேடலின் வரலாறானவள் இன்று மறுதேடலின் வரலாறானாள்.

கோடிட்ட இடங்களை நிரப்பியவள் அல்லள் கோடுகளாய் தொடர்ந்து என் தேடலை தொடரச் செய்தவள்

மழையின் வரவை ஆடிக் கொண்டாடும் மயிலல்லள் மழையின் வரவால் நடுங்கும் மயிலவள்.

யாரோ என்ற ஏக்கம் தந்தவள் இலள் என்னவள் என்ற உறுதி தந்தவள்

காப்பீடற்றதெனினும் என் அன்பை முதலீடு செய்யச் செய்தவள் தவணையாய் என் தவிப்பைக் கேட்டவள்.

விடைபெற்றுச் செல்லும் வேளைகளிலும் ஏராளம் கேள்விகள் எண்ணில் எழச் செய்தவள்

உருவகம் தேட வைத்தவள் இலள் என் வாழ்வின் உருவமாய் வந்தவள்

வார்த்தைகள் பறிப்பவள் அல்லள் வார்த்தைகள் புதிதாய் மலரச் செய்பவள்

என் வாழ்விற்கு இலக்கணம் அமைத்தவள் உரையாடுகையில் என் இலக்கணம் பறிப்பவள்.

ஏராளம் "போன்றவள்" மேலே இருக்கின்றன... இது இறுதி "போன்றவள்"..

ஆம்.அவள் என்னவள் போன்றவள் தோன்றினள் எனினும் என்னவள் அல்லள்.

என் எதிரொலியானவள் எதிர்த்த ஒலிக்கலானாள் ஏனோ...

love,

Mani kannan

click here to subscribe..

13 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page