#T19. காதல் காண்கிறேன்!
- Mani Kannan
- Feb 14, 2019
- 1 min read

காதல் காண்கிற அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்!
காதல் காண்கிறேன்,
எதிர்பார்க்கும் நீ எக்கணம்
எதிரில் வருவாய் என்ற ஏக்கத்தில்!
காதல் காண்கிறேன்,
கண்மூடி காண்கின்ற உன்னை என்
கண்ணில் காண வேண்டும் என்ற ஆவலில்!
காதல் காண்கிறேன்,
ஏராளம் சொற்கள் சேர்த்த நான்
தாராளமாய் மௌனங்கள் செலவிட்ட போது!
காதல் காண்கிறேன்,
ஆயிரம் கேள்விகள் துளிர்விட்ட மனதில்
அரைநொடி பதிலாய் நீ நிற்கையில்!
காதல் காண்கிறேன்
என்னைச் சுற்றி உலகமென இருந்த நான்
என் உலகத்தை சுற்றி வந்த வேளைகளில்!
காதல் காண்கிறேன்!
நினைவுகள் சேகரித்த நான் என்
நினைவகம் நிறைந்ததை அறிந்ததில்!
காதல் காண்கிறேன்!
யாரோ என்று நான் கொண்ட தேடல்
நீயோ என்ற ஐயம் கொண்டதில்!
அன்புடன்,
மணி கண்ணன்
click here to subscribe..
superb...:-)