கற்றது உன்னிடம்.....
நான் கலக்கப் போவதும் உன்னிடம்...
கற்று கொடுப்பவர்கள் எப்போதுமே கர்வம் கொள்வதில்லை.,ஆனால் உன் கர்வம் கூட கற்று கொடுக்கும் இந்த மனித இனத்திற்கு.ஆனால் மனிதம் தொலைத்துவிட்டு மனிதர்களாய் திரியும் நாம் என்று கற்றுக்கொள்ள போகிறோம் இந்த இயற்கையிடம்.அந்தளவு எளிதல்ல பகுத்தறிவினால் பகுத்து அறியும் இந்த மனிதத்தை கற்க வைப்பது.
நான் கற்றுக் கொண்ட சிலவற்றை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.
நாம் ஓடிட பாதை தேவை இல்லை..ஓட வேண்டும் என்ற எண்ணமே போதும் என்பதை நீ நதியென ஓடியதில் கற்றுக் கொண்டேன்.
சில சமயங்களில் பொங்கி எழுவதும் கூட நியாயம் என கற்றுக் கொண்டேன், கடலென நீ கர்வம் கொண்டு பொங்கியதில்.
நம்மால் முடிந்தவரை அதிகபட்ச உயிர்களைத் தொட வேண்டும் என ஆசை கொண்டேன், காற்றென நீ அனைத்தையும் தீண்டிச் செல்வதில்.
நம் கண்ணீருக்காக கூட பிறர் வேண்டுவர் என அறிந்து கொண்டேன்,மழையென நீ அழ நாங்கள் வேண்டிக் கொள்வதில்
நம் அழுகையை தேக்கி வைத்திட சிலர் உள்ளனர் என்று கண்டேன்,மேகமாய் நீ மழையைத் தேக்கி கொள்வதில்.
உன்னுடைய அனைத்துமே பொங்கி வழியும் அந்தந்த தருணங்களில்.அதைப் பின்பற்றியே தொடர்கிறேன் என் வாழ்வை.என் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் எழில் கொண்டவையே ஒவ்வொரு வகையில்.என்னை நான் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகளை நீயே தருகிறாய்.நீ இல்லையேல் ஏதுமில்லை..
மரமே உன்னிடம் சாளரம் கேட்கிறோம் அதனூடே தென்றலும் கேட்கிறோம்.
இயற்கையை ரசிக்கும் இயற்கை மனிதனாய்...
love
Mani kannan
click here to subscribe
Comments