முதல் பதிவான "why do we want to define ourselves?-ஐ பின்னுக்கு தள்ளிய தமிழுக்கு வணக்கம்...!
என்றாவது ஒரு நாள், உங்கள் கனவின் காட்சிகள் கண் முன் அரங்கேறும். என்றாவது ஒரு நாள், பாதை தேடிய கால்கள் தனக்கென ஒரு பாதையை உருவாக்கும். என்றாவது ஒரு நாள், உங்கள் கிறுக்கல்கள் ஓவியமாகும். என்றாவது ஒரு நாள், உங்கள் அசைவுகள் நடனமாகும். என்றாவது ஒரு நாள், நீங்கள் தேடிய உலகத்தால் நீங்கள் தேடப்படுவீர்கள். என்றாவது ஒரு நாள், உங்களால் வார்த்தைகள் புது அர்த்தம் பெறும். என்றாவது ஒரு நாள், மாற்றம் தேடிய நீங்கள் மாற்றத்தின் சிறையில் அடைபடுவீர்கள். என்றாவது ஒரு நாள், உங்கள் வரையறைகள் இவ்வுலகால் பின்பற்றப்படும். என்றாவது ஒரு நாள், உங்கள் விரல் அசைவுகள் கட்டளையாகும்.
என்றாவது ஒரு நாள், இன்றைய உங்களை நாளைய நீங்கள்தாண்டி செல்வீர்கள். என்றாவது ஒரு நாள், ஒருமாதிரி பார்க்கப்பட்ட நீங்கள் ஒரு மாதிரியாக பார்க்கப்படுவீர்கள். என்றாவது ஒரு நாள், இந்த "என்றாவது ஒருநாள்" இல்லாமல் போகும். நாள்காட்டியின் தாள்கள் குறைய, உங்கள் வாழ்வின் நாள்கள் நிறைய, உங்கள் வாழ்க்கை கொண்டாட்டமாகிடும் .....
மீண்டும் சந்திப்போம்...
click here to subscribe..
love,
Mani kannan
Comentarios